Wednesday 17th of April 2024 10:34:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது!

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது!


யாழ்.மாநகரசபைக்கு என காவல்படை அமைத்த விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த இரவு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனும் உறுப்பினர் வ.பார்த்தீபனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன் அடிப்படையில் அங்கு சென்றிருந்தபோதே மணிவண்ணன் கைதாகியிருப்பதாக தெரியவருகிறது.

யாழ்.மாநகரசபைக்கு என காவல்படை ஒன்றை அமைத்தமை தொடர்பிலான சர்ச்சையின் தொடராக நேற்று முன்தினம் யாழ்.மாநகர ஆணையாளர் உட்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே.

குறித்த காவல் படைக்கு பயன்படுத்திய சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் பணியாற்றிய காவல்துறையினரின் சீருடையை ஒத்தது என்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் கூட விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE