Wednesday 21st of April 2021 04:11:56 AM GMT

LANGUAGE - TAMIL
-
மணிவண்ணனைச் சந்திக்க வவுனியாவில் கூடிய சட்டத்தரணிகள்! சட்டரீதியிலான சந்திப்புக்கு அனுமதி மறுப்பு!

மணிவண்ணனைச் சந்திக்க வவுனியாவில் கூடிய சட்டத்தரணிகள்! சட்டரீதியிலான சந்திப்புக்கு அனுமதி மறுப்பு!


யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியா கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்பட்ட யாழ்.மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனை சந்திப்பதற்காக சட்டத்தரணிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகதில் கூடியிருப்பதாக தெரியவருகிறது.

இருந்தபோதிலும் அவர்களுக்குச் சட்டரீதியில் மணிவண்ணனை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் இருந்தபோதிலும் மணிவண்ணனை சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு எழுத்து மூலம் கோரிக்கைவிடுத்து பத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் காத்திருப்பதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தரணி திருக்குமரன், இளங்குமரன் உட்பட்ட சட்டத்தரணிகள் அங்கு பிரசன்னமாகியுள்ளனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் இன்று காலை சட்டத்தரணிகளை சந்தித்துச் சென்றிருக்கின்றார்.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டிலேயே மணிவண்ணன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE