இந்தியாவில் கொரோனா தொற்று நோயாளர் தொகை முன்னைய பதிவுகளை முறியடித்து மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரங்களில் 1 இலட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 780 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 இலட்சத்து 60 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 67 ஆயிரத்து 642- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 19 இலட்சத்து 13 ஆயிரத்து 292 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 9 இலட்சத்து 79 ஆயிரத்து 608 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இந்தியா முழுவதும் இதுவரை 9 கோடியே 43 இலட்சத்து 34 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா