Thursday 18th of April 2024 11:16:44 PM GMT

LANGUAGE - TAMIL
-
வெளிவந்தது ”ஆயகலை” சஞ்சிகையின் இரண்டாவது இதழ்!

வெளிவந்தது ”ஆயகலை” சஞ்சிகையின் இரண்டாவது இதழ்!


குரலோசை – நுண்கலைகளின் தாயகத்தின் 'ஆயகலை' எனும் இரு மாதச் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் இன்று வெளிவந்துள்ளது.

தவத்திரு யோக சுவாமிகள் சிறப்பிதழாக வெளிவந்திருக்கும் இவ்விதழில் வசாவிளான் தவமைந்தன் எழுதிய யோக சுவாமிகளின் வாழ்வு, ஆன்மீக வரலாறு பற்றிய கட்டுரையும் சங்கீதபூசணம் சு.கணபதிப்பிள்ளை பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் யோகியின் 'யோகசுவாமிகள் அருளிய காப்பும் பொருளும்', க.ஞானபாஸ்கரனின் 'நாடக அரங்கக் கல்லூரி', இரா.தனராஜின் 'ஆழப் பதிந்த சுவடுகள்', பேராசிரியர் மௌனகுருவின் 'உலகத் தாய் மொழி தினம்' செ.அன்புராசா அடிகளாரின் 'முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம்' க.சீலனின் 'உலக நாடக தினம் 2021' போன்ற கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. இவற்றுடன் பரத அரங்கேற்றங்கள், நாடகங்கள், நூல் வெளியீடுகள் பற்றிய செய்திக் கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. இதன் அட்டைப்பட ஓவியத்தை த.தஜேந்திரன் வரைந்துள்ளார்.

பூபாலசிங்கம் புத்தக நிலையம்(யாழ்.பேருந்து நிலையம் அருகில்), புத்தகக் கூடம் (யாழ்.பல்கலைக் கழகம் முன்பாக), நீத் புத்தக நிலையம் (மருதனார் மடம், இராமநாதன் நுண்கலைக் கழகம் முன்பாக) பரணி புத்தகக் கூடம் (நெல்லியடி மத்திய கல்லூரி அருகில்) ஆகிய இடங்களில் ஆயகலையைப் பெற்றுக் கொள்ள முடியும் என அதன் ஆசிரியர் வசாவிளான் தவமைந்தன் தெரிவித்துள்ளார். 03.02.2021 அன்று ஆயகலையின் முதலாவது இதழ் சுவாமி விபுலானந்த அடிகள் சிறப்பு மலராக வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE