Friday 29th of March 2024 10:11:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
மொட்டு கூட்டணிக்குள் குழப்பம்: பங்காளிக் கட்சி தலைவர்களை நாளை சந்திக்கும் மகிந்த!

மொட்டு கூட்டணிக்குள் குழப்பம்: பங்காளிக் கட்சி தலைவர்களை நாளை சந்திக்கும் மகிந்த!


மாகாணசபை தேர்தல் சட்ட முன்மொழிவு உள்ளிட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் 'மொட்டு' கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழபத்தை அடுத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அலரி மாளிகையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டத்தின் போது எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டத்தின் சில சரத்துகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு நிலைப்பாட்டினையும், ஏனைய கட்சிகள் வேறு நிலைப்பாட்டினையும் கொண்டுள்ள காரணத்தினால் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடியாதுள்ளது.

அதேநேரத்தில், துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம், மே தின கூட்டத்தொடர் என்பன குறித்தும் நாளை இடம்பெறவுள்ள ஆளும் கட்சியினது பங்காளிகட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE