Tuesday 23rd of April 2024 12:15:49 PM GMT

LANGUAGE - TAMIL
.
கடத்தல் வாகனத்தால் இராணுவத்தினரை மோதித்தள்ளி தப்பித்தவர்களை தேடும் நடவடிக்கையில் 4 பொலிஸ் குழு!

கடத்தல் வாகனத்தால் இராணுவத்தினரை மோதித்தள்ளி தப்பித்தவர்களை தேடும் நடவடிக்கையில் 4 பொலிஸ் குழு!


சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திச் சென்ற வாகனத்தினால் ஏ-9 நெடுஞ்சாலை ஓமந்தை சந்தியில் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினரை மோதித்தள்ளிய நிலையில் தப்பித்துச் சென்றவர்களை தேடும் நடவடிக்கையில் 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் இரண்டு பேரை காயப்படுத்தி தப்பிச் சென்ற கெப் ரக வாகனத்தின் சாரதி, உதவியாளர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் ஆகியோரை கைது செய்வதற்காக 4 விசேட டிபாலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் அந்த பிரதேசத்தினை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள், வவுனியா மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஓமந்தை பகுதியில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு, கட்டளையை மீறி பயணித்த குறித்த கெப் ரக வாகனம் மோதியதில் இரு இராணுவ சி்ப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.

சட்டவிரோத மரக்குற்றிகளை கடத்திச்சென்ற கெப் ரக வாகனமே இவ்வாறு இராணுவத்தினரை மோதி சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE