Wednesday 24th of April 2024 01:35:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டு.சீயோன் தேவாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன,ஹெட்ட அப்புகாமி விஜயம்!

மட்டு.சீயோன் தேவாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன,ஹெட்ட அப்புகாமி விஜயம்!


இலங்கையினை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று நாளையுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இதனை முன்னிட்டு நாளை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் காவிந்த ஜயவர்த்தன,ஹெட்ட அப்புகாமி ஆகியோர் விஜயம் செய்தனர்.

இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதில் கொல்லப்பட்ட 31பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.மெழுகுதிரியேற்றப்பட்டு பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டனர்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் முதல் தடவையாக தாக்குதல் நடந்த ஆலயத்தில் இந்த ஆண்டுதான் ஆராதனை நடாத்தவுள்ளதாக சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை நீதியின் முன்பாக நிறுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு அதனை அவர்கள் செய்வார்கள் என நினைக்கின்றேன் எனவும் போதகர் இதன்போது தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE