Thursday 28th of March 2024 04:19:25 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒரு இனம் இன்னும் ஒரு இனத்திற்கு எதிராக செயல்படுவது உகந்தது இல்லை; ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை!

ஒரு இனம் இன்னும் ஒரு இனத்திற்கு எதிராக செயல்படுவது உகந்தது இல்லை; ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை!


நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற குண்டு தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களை இன்னும் இனம் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு பின் யார் இருந்தார்கள் என்பதையும் இன்னும் சரியாக கண்டு கொள்ளவில்லை.

எனவே எங்களுக்கு ஒரு நீதி அவசியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் 2 ஆவது வருட நினைவு இன்று அனுஸ்ரிக்கப்பட்டது.

இதன் போது விடுத்துள்ள இரங்கல் செய்தியில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாஸ்கா திருவிழா அன்று குண்டு வெடிப்புக்களினால் பலர் இறந்து போனார்கள். அந்த குண்டு வெடிப்புக்களில் இரண்டு பெரிய கத்தோலிக்க ஆலயங்கலிலும் மட்டக்களப்பிலிருந்து ஒரு கிறிஸ்தவ ஆலயத்திலும் இடம் பெற்ற குண்டு தாக்குதலில் மக்கள் அதிகம் உயிரிழந்தார்கள்.

அத்தோடு இன்னும் பல ஹோட்டல்களிலும் அன்றைய தினம் இடம் பெற்ற குண்டு தாக்குதலினால் மக்கள் உயிரிழந்தனர்.

நாங்கள் அவர்களை இன்று விசேடமாக நினைவு கூறுகின்றோம். இரண்டு ஆண்டுகள் கடந்து போனாலும் நாங்கள் எமது ஆலயங்களில் குறிப்பாக மன்னார் மறைமாவட்டத்தில் எமது ஆலயங்களிலே சரியாக காலை நேரம் 8.45 மணிக்கு கோயில் மணியை ஒலிக்கச் செய்து தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌனம் அஞ்சலி செலுத்தியுள்ளோம். நாங்கள் விசுவாசிப்பது இவர்கள் இந்த குண்டு தாக்குதலினால் அவர்களுடைய உயிர்களை இழந்தாலும் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று அவர்களுக்காக நாங்கள் செபிப்பது எமது கடமை.

அவர்களை இந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படியாக விசேடமாக நினைவு கூறுகின்றோம். அது உண்மையிலேயே ஒவ்வொறு வருடமும் இடம்பெற வேண்டும் அவர்களை நாங்கள் மறந்துவிட முடியாது.

இப்படியாக குண்டு தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களை இன்னும் இனம் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு பின் யார் இருந்தார்கள் என்பதையும் இன்னும் சரியாக கண்டு கொள்ளவில்லை.

எனவே தான் எங்களுக்கு ஒரு நீதி அவசியம். அது யார் செய்தது எதற்காக செய்தார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு இனம் இன்னும் ஒரு இனத்திற்கு எதிராக செயல்படுவது உகந்தது இல்லை. நாங்கள் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் நாங்கள் ஒரு நல்ல இணக்கப்பாட்டுடன் ஒற்றுமையாக வாழ்வது முக்கியம்.

ஒரு தவறு செய்தவரை மன்னிப்பது இயேசுவினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கட்டளை. ஆகையினால் தான் நாங்கள் இப்படியான ஒரு பெரிய தவறு செய்தவரை கூட மன்னிக்க அழைக்கின்றோம்.

ஆனாலும் எது உண்மை?என்ன நடந்தது? என்ற நீதியை நாங்கள் அறிந்து கொள்வது எங்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கின்றது.

எனவே இந்த வருடம் அவர்களை விசேடமாக நினைவு கூர்ந்து அந்த நீதியை எதிர் பார்ப்போம். இவர்கள் தங்களது உயிரை இழந்ததன் வழியாக அவர்கள் இறைவனிடமிருந்து மென்மேலும் ஆசீர் வதிக்கப்பட வேண்டும் என்றும் மன்றாடிக் கொள்வோம். என அவர் தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE