Friday 7th of May 2021 04:56:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
தொடர்ந்து மோசமடையும் இந்தியாவின் நிலை; நேற்றும் 3,645 பேர் பலி! 3,79,257 பேருக்கு தொற்று!

தொடர்ந்து மோசமடையும் இந்தியாவின் நிலை; நேற்றும் 3,645 பேர் பலி! 3,79,257 பேருக்கு தொற்று!


இந்தியாவில் கொரோனா தொற்று நோய் நெருக்கடி சற்றும் குறையாமல் தொடர்ந்தும் மோசமடைந்து வருகிறது. உலகில் எங்கும் இல்லாதவாறு கடந்த 24 மணி நேரங்களில் இங்கு 3 இலட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், இந்தியாவில் ஒரு நாள் மிக அதிகளவு கொரோனா மரணங்களும் நேற்று பதிவாகின. நேற்று 3,645 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

8-ஆவது நாளாக 3 இலட்சத்துக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் பதிவான நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 83 இலட்சத்து 76 ஆயிரத்து 524-ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 4 ஆயிரத்து 832-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 இலட்சத்து 86 ஆயிரத்து 878 -ஆக பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2 இலட்சத்து 69 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது மருத்துவமனைகளில் 30 இலட்சத்து 84 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், மொத்தமாக இந்தியாவில் இதுவரை 15 கோடியே 20 ஆயிரத்து 648 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE