Friday 7th of May 2021 03:28:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
பல்லாயிரம் பேர் பங்கேற்ற பண்டிகை நிகழ்வில் பாரிய விபத்து! இஸ்ரேலில் 38 பேர் பலி - பலர் காயம்!

பல்லாயிரம் பேர் பங்கேற்ற பண்டிகை நிகழ்வில் பாரிய விபத்து! இஸ்ரேலில் 38 பேர் பலி - பலர் காயம்!


பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஒன்று கூடிய பண்டிகை நிகழ்வில் கூரை சரிந்து விழுந்து பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

வட-கிழக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள மெரோன் நகரில் பண்டிகை நிகழ்வை கொண்டாடும் வகையில் பல்லாயிரக் கணக்கானோர் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்போது அவ்விடத்தல் அமைக்கப்பட்டிருந்த கூரை எதிர்பாராத வகையில் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் பதறியடித்து வெளியேறுவதற்கு முண்டியடித்ததில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கூரை இடிந்து விழுந்தது மற்றும் கூட்ட நெரிசலில் சிக்சி 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பல டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதேவேளை இவ் விபத்து சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு "கடுமையான பேரழிவு" என்று வர்ணித்தார், மேலும் உயிரிழப்புகளுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE