Friday 29th of March 2024 06:40:24 AM GMT

LANGUAGE - TAMIL
-
உலகளவில் கொரோனா 150 மில்லியனை கடந்தது; 3.16 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா 150 மில்லியனை கடந்தது; 3.16 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!


உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்து இன்று பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா மரணங்களும் இன்றுவரை 31 இலட்சத்து 61 ஆயிரத்து 637-ஐக் கடந்துள்ளதாகவும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை உலகளாவிய தொற்று நோய் தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பை ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் வெளியிட்டுள்ளது.

அந்தத் தரவுகளின் படி உலகளவில் கொரோனா தொற்றாளர் தொகை 150,102,206 ஆகவும் கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 3,161,637 ஆகவும் இன்றுவரை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் மற்றும் அதிக கொரோனா மரணங்களை பதிவு செய்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. அங்கு இன்றுவரை 3 கோடியே 22 இலட்சத்து 83 ஆயிரத்து 801 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 5 இலட்சத்து 75 ஆயிரத்து 70 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

தொற்று பாதிப்பில் அடுத்த இடங்களில் பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.

பிரேசிலில் மொத்த கொரோனா மரணங்கள் இன்று 401,186 ஆக உயர்ந்துள்ளதாக பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகையும் இன்றுவரை 1 கோடியே 45 இலட்சத்து 92 ஆயிரத்து 886-ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3 இலட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட மொத்த கொரோனா தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 87 இலட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், நேற்று 3,498 பேர் உயிரிழந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பலியெடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE