Friday 7th of May 2021 03:17:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆப்கானில் இருந்து அமெரிக்கா, நோட்டோ படைகளை விலக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

ஆப்கானில் இருந்து அமெரிக்கா, நோட்டோ படைகளை விலக்கும் நடவடிக்கை ஆரம்பம்!


ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை அமெரிக்க ஆரம்பித்துள்ளது. அத்துடன், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நேட்டோ படையணிகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ளப்படவுள்ளன.

நேட்டோ மற்றும் அமெரிக்க படைகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளன. இந்நிலையில் செப்டம்பர் வரை பகுதி பகுதியாக தனது படைகள் விலக்கிக்கொள்ளப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க மற்றும் நேட்டோ படையணிகளைத் திருப்பியழைக்கும் காலப்பகுதியில் அமைதியைப் பேணுமாறு ஆப்கானிஸ்தான் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நேற்று வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளன.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் விலக்கிக்கொள்ளப்படும் இந்தச் சூழலில் ஏதேனும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதால் ஆப்கானிஸ்தானில் இப்படையணிகள் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளள.

கடந்த 2001 செப்டம்பர் 11-ஆம் திகதி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் பின்னணியில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடனின் இருந்தது அடையளாம் காணப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பலமாக இருந்த தலிபான் தீவிரவாதிகள் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

தொடர்ந்து அமெரிக்கா தனது படையணிகளை ஆப்கானில் களமிறக்கியது. ஏனைய பல நாடுகளும் இந்தப் போரில் இணைந்ததால் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டனர். எனினும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் வன்முறை நீடித்து வருகிறது.

தலிபான் மற்றும் ஆப்கான் அரச படைகளுக்கு இடையே கடுமையான மோதல்கள் அண்மைக்காலங்களில் இடம்பெற்று வரும் நிலையில் தனது படைகளை மீளப்பெறும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE