Friday 7th of May 2021 03:06:54 AM GMT

LANGUAGE - TAMIL
.
அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது திமுக; ஓரிரு நாட்களில் பதவியேற்பு!

அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது திமுக; ஓரிரு நாட்களில் பதவியேற்பு!


தமிழக சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகளின் பிரகாரம் 159 இடங்களைப் பிடித்து தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க. மட்டும் 127 இடங்களைில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி 75 இடங்கள் மட்டுமே பிடித்து தோல்வி அடைந்துள்ளது.

தமிழகத்தில், தற்போதைய சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடைவதையொட்டி மொத்தமுள்ள 234 தொகுதிக்கான சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், சட்டமன்ற தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 174 இடங்கள், காங்கிரஸ்-25, மதிமுக-6, மார்க்சிஸ்ட்-6, இந்திய கம்யூனிஸ்ட்-6, விடுதலை சிறுத்தைகள்-6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-3, மனிதநேய மக்கள் கட்சி-2, தமிழக வாழ்வுரிமை கட்சி-1, மக்கள் விடுதலை கட்சி-1, ஆதிதமிழர் பேரவை-1 ஆகிய கட்சிகள் இடம்பெற்றன.

அதிமுக கூட்டணியில் அதிமுக 180 இடங்கள், பாமக-23, பாஜ-20, தமாகா-6, பெருந்தலைவர் மக்கள் கட்சி-1, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்-1, புரட்சி பாரதம்-1, மூவேந்தர் முன்னேற்ற கழகம்-1, பசும்பொன் தேசிய கழகம்-1 ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.

இதுதவிர மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளும், அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, கோகுல மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் உள்ள 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.

தோ்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களைப் பிடித்து அமோக வெற்றிபெற்றுள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட 174 வேட்பாளர்களில் 127 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதன்மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக இன்னும் ஓரிருநாளில் பதவியேற்க உள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும் மதிமுக 4, வி.சி.க. 4, மார்க்சிஸ்ட் 2, இ.கம்யூ. 2, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளன.

அதேநேரம் அதிமுக கூட்டணியில் அதிமுக மட்டும் 65 இடங்களிலும், பாமக 5, பாஜக 4, புரட்சிபாரதம் 1 ஆகிய இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு 54 இடங்களைகொடுத்தது. இதில் 10 இடங்களில் மட்டுமே அக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று மற்ற அணிகளாக மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் தமிழகத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தார்.ஆனால், கடைசி சுற்றுகளில் பின்னடைவு ஏற்பட்டு கமலஹாசனும் தோல்வி அடைந்தார்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE