Friday 7th of May 2021 04:10:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாவின் ஓயாத அலை தாக்குதல்: ஒரே வாரத்தில் 54 பேரை பலியெடுத்து 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

கொரோனாவின் ஓயாத அலை தாக்குதல்: ஒரே வாரத்தில் 54 பேரை பலியெடுத்து 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!


இலங்கையில் கொரோனா 3வது அலை தொற்று ஓயாத அலையாக தொடர்ந்து தாக்கிவரும் நிலையில் ஒரே வாரத்தில் 54 பேரின் உயிர்களை பலியெடுத்தும், 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை பாதித்தும் உள்ளது.

நேற்றைய தினம் 1923 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஏழாவது நாளாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில்,

ஏப்ரல்-27 இல் - 1,111 தொற்றாளர்கள்

ஏப்ரல்-28 இல் - 1,461 தொற்றாளர்கள்

ஏப்ரல்-29 இல் - 1,531 தொற்றாளர்கள்

ஏப்ரல்-30 இல் - 1,662 தொற்றாளர்கள்

மே-01 இல் - 1,716 தொற்றாளர்கள்

மே-02 இல் - 1,891 தொற்றாளர்கள்

மே-03 இல் - 1,923 தொற்றாளர்கள்

அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்வர்களது மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து 11 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோன்று கடந்த ஒரு வார காலத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பவர்களது எண்ணிக்கை 54 ஆக உள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 709 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்களுள் 449 பேர் ஆண்கள் என்பதுடன் 260 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களுள் 70 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE