Friday 7th of May 2021 04:51:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒக்ஸிஜனை சேமிக்க 7,000 பாரிய சிலிண்டர்களை வாங்குகிறது இலங்கை!

ஒக்ஸிஜனை சேமிக்க 7,000 பாரிய சிலிண்டர்களை வாங்குகிறது இலங்கை!


இலங்கை கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலையுடன் போராடிவரும் நிலையில் அதிகரிக்கும் தொற்று நோயாளர்களின் ஒக்ஸிஜன் தேவையை ஈடு செய்யும் வகையில் அதிக ஒக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

இலங்கையின் மருத்துவமனைகளில் தற்போது 24,000 மருத்துவ ஒக்ஸிஜன் சிலிண்டர்களும் 4,000 பெரிய சிலிண்டர்களும் உள்ளன.

தற்போதைய நிலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. எனினும் ஒக்ஸிஜனை சேமிக்க போதிய சிலிண்டர்கள் .இல்லாமையே பிரச்சினை எனவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

இந்நிலையில் 7,000 பாரிய சிலிண்டர்களை பெற்று ஒக்ஸிஜனை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் இவற்றில் 400 சிலிண்டர்கள் நாட்டுக்கு எதிர்பார்க்கிறோம் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு ஒக்ஸிஜன் 25 தொன்னாக உள்ளது. தேவையேற்படின் அதகை 80 தொன் வரை அதிகரிக்கும் திறன் எங்களிடம் உள்ளது எனவும் அவா் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE