Saturday 19th of June 2021 10:06:36 AM GMT

LANGUAGE - TAMIL
.
பிரபல நடிகை சம்யுக்தாவுக்கு கொரோனா: மரண பயத்தின் கொடுமையை உணர்த்தியதாக பதிவு!

பிரபல நடிகை சம்யுக்தாவுக்கு கொரோனா: மரண பயத்தின் கொடுமையை உணர்த்தியதாக பதிவு!


பிரபல திரைப்பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மரண பயத்தின் கொடுமையை உணர்ந்ததாக பதிவிட்டுள்ளார்.

ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சம்யுக்தா ஹெக்டேவுக்கு சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தொற்று தீவிரம் பெற்று வரும் நிலையில் திரைப்பிரபலங்களையும் தாக்கி வருகிறது.

கடந்த மாதம் சம்யுக்தாவின் பெற்றோருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக சம்யுக்தாவுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்....

“எனக்கு இப்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனாலும் சுவை, வாசனை உணர்வை இழந்துள்ளேன். சோர்வாக இருக்கிறது. என்னை உதவி அற்றவளாக உணர்கிறேன். நான் அதிகமாக நேசிப்பவர்களை இழந்து விடுவேனோ என்ற பயம் வந்தது. மரண பயம் கொடுமையானது.

அம்மா, அப்பாவும் கொரோனா பாதிப்பில் இருந்தனர். எங்களுக்கு அந்தஸ்தும் ரசிகர்களும் இருந்தாலும் நோய் விஷயத்தில் உதவியற்றவர்களாகவே உணர்கிறோம்.

எனது அறையில் அடைபட்டு அழுதேன். என் அம்மாவை கட்டிப்பிடிக்க முடியவில்லை.

நம்மில் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்’’ என்றுஅதில் கூறியுள்ளார்.

சம்யுக்தா ஹெக்டே, ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE