Tuesday 16th of April 2024 03:09:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
அப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு  கிராம மக்களுக்கு நடிகர் மகேஷ் பாபு தடுப்பூசி!

அப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிராம மக்களுக்கு நடிகர் மகேஷ் பாபு தடுப்பூசி!


பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது அப்பாவின் பிறந்தநாளையொட்டி கிராம மக்களுக்கு தனது சொந்த செலவில் தடுப்பூசி வழங்கியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணாவுக்கு மே 31ம் திகதியான இன்று பிறந்த நாள்.

அவரது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் மகேஷ்பாபு நடித்த படங்களின் போஸ்டர், டிரைலர்களை அவரது பட தயாரிப்பாளர்கள் வெளியிடுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அலை காரணமாக விழாக்கள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

தந்தையின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து தடுப்பூசியை வழங்கி இருப்பதாகவும் மகேஷ் பாபு தனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE