Saturday 19th of June 2021 09:43:36 AM GMT

LANGUAGE - TAMIL
.
ICC கூட்டம் இன்று: ரீ-20 உலகக்கிண்ண போட்டியை நடத்தும் வாய்ப்பினை தக்கவைக்க இந்தியா பிரயத்தனம்!

ICC கூட்டம் இன்று: ரீ-20 உலகக்கிண்ண போட்டியை நடத்தும் வாய்ப்பினை தக்கவைக்க இந்தியா பிரயத்தனம்!


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் ரீ-20 உலக்கிண்ண தொடரை நடத்தும் வாய்ப்பினை தக்கவைப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் பிரயத்தனம் எடுத்துள்ளது.

இன்று செவ்வாய் கிழமை காணொளி வாயிலாக நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி கலந்து கொள்கிறார்.

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் ஒக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

கொரோனா 2வது அலை அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக எழுந்துள்ளது. இந்த போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இருந்த போதிலும் இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக இருக்கிறது. எனவே கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வர ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்று தெரிகிறது.

இது தவிர, அடுத்த 8 ஆண்டுகளுக்கான (2023-2031) வருங்கால போட்டி அட்டவணையை தீர்மானிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டதால் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை எப்போது தொடங்கி நடத்தலாம் என்றும் யோசனை செய்யப்படுகிறது.

கிரிக்கெட் போட்டியை உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் வளர்ப்பது குறித்தும், குறிப்பாக பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிரபலப்படுத்துவது பற்றியும் கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது.

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE