Saturday 19th of June 2021 09:40:43 AM GMT

LANGUAGE - TAMIL
-
அரிதான H10N3 பறவைச் காய்ச்சல்  முதல் மனித தொற்று சீனாவில் பதிவு!

அரிதான H10N3 பறவைச் காய்ச்சல் முதல் மனித தொற்று சீனாவில் பதிவு!


சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் 41 வயதான ஒருவர் H10N3 எனப்படும் அரிதான பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதுவே இந்தவகை வைரஸால் தொற்றுக்குள்ளாகிப் பாதிப்பட்ட முதல் மனித வழக்கு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜென்ஜியாங் நகரில் வசிக்கும் நபர் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் காரணமாக ஏப்ரல் 28 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஒரு மாதத்தின் பின்னர் மே 28 ஆம் திகதி அன்று அவருக்கு H10N3 பறவைக்க்காய்ச்சல் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

ஆனால், அந்த நபர் எவ்வாறு? எங்கு? அந்த வைரஸால் பாதிக்கப்பட்டார்? என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

H10N3 என்பது ஆபத்துக் குறைந்த வைரஸாகும்.பிற வைரஸுடன் ஒப்பிடும் போது இது கடுமையான நோயை ஏற்படுத்தாது. அத்துடன் விலங்குகளில் இருந்து இது இலகுவில் மனிதர்களுக்குத் தொற்றாது. எனவே, இந்த வைரஸ் பெரிய அளவில் பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவாக உள்ளது என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த நபரின் உடல் நிலை இப்போது சீராக உள்ளது. அவா் மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற தயாராக இருக்கிறார். அவரது நெருங்கிய தொடர்புகளை ஆய்வு செய்ததில் இதுபோன்று வேறு எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக கோழிக் கடைகளில் அல்லது கோழிகளுடன் வேலை செய்பவர்களை தான் இந்த வகை பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

2016 - 2017 ஆம் ஆண்டில் சுமார் 300 பேரைக் கொன்ற H7N9 பறவைக்காய்ச்சல் திரிபுக்குப் பின்னர் பறவைக் காய்ச்சலால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மனித நோய்த் தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும்,H10N3 வைரஸால் மனித நோய்த் தொற்று ஏற்பட்டதாக வேறு எந்த வழக்குகளும் இதற்கு முன்னர் உலகளவில் பதிவாகவில்லை எனவும் சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE