Monday 20th of September 2021 03:11:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
மணிரத்னம் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வன் அப்டேட் !

மணிரத்னம் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வன் அப்டேட் !


தமிழ் நாவல்கள் படிக்கும் வாசகர்கள் பலரும் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அந்த நாவலை சினிமாவாக பார்ப்பதற்காக பலரும் ஏங்கியிருந்தார்கள். அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க முன்வந்து அதை ஏறக்குறைய முடித்தும் விட்டார்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், லால், அஷ்வின் கக்குமனு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா என பலர் இப்படத்தில் நடிக்கிறார்களாம்.

ஏஆர் ரகுமான் இசையமைக்க இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தாய்லாந்தில் ஆரம்பமாகி அதன்பின் ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கடந்த வருடம் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடந்தது.

இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் பாகத்திற்கான குறிப்பிடத்தக்க படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம்.

இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது ஒரு வாள் மட்டும் கொண்ட ஒரே ஒரு போஸ்டரை வெளியிட்டார்கள். அதன்பின் இப்படம் தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இன்று மணிரத்னம் பிறந்தநாள் என்பதால் ஏதாவது அப்டேட் வரும் என்ற அவர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு ஏமாற்றதிதிலேயே முடிந்திருக்கிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE