Friday 29th of March 2024 04:28:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
சிரேஷ்ட அரசியல்வாதி ஐசக் ஹெர்சாக்  இஸ்ரேல் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு!

சிரேஷ்ட அரசியல்வாதி ஐசக் ஹெர்சாக் இஸ்ரேல் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு!


இஸ்ரேல் புதிய ஜனாதிபதியாக மூத்த அரசியல்வாதியும் பாரம்பரிய இஸ்ரேலிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஐசக் ஹெர்சாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குறித்து நாடும் அதன் பாராளுமன்றமும் பிளவுபட்டிருந்தாலும் இஸ்ரேலியா பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை கூடி புதிய ஜனாதிபதியைத் தோ்வு செய்தனர்.

இஸ்ரேல் நாட்டில் தற்போதைய ஜனாதிபதியான ருவன் ரிவ்லின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 60 வயதான ஐசக் ஹெர்சாக் இஸ்ரேல் நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு முன் இஸ்ரேலின் தொழிற்கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஐசக் ஹெர்சாக் இருந்துள்ளார். இவர் கடந்த 2013 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ஐசக் ஹெர்சாக் விலகினார். அதன் பிறகு தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

ஐசக் ஹெர்சாக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இஸ்ரேல் நாட்டின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவரது தந்தை சைம் ஹெர்சாக்கும் இஸ்ரேல் ஜனாதிபதியாக இருந்தவர். அதற்கு முன் ஐ.நா. சபையின் இஸ்ரேல் தூதராகவும் ஐசக் ஹெர்சாக் பதவி வகித்துள்ளார்.

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த 4 முறையும் தற்போது பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெரும்பான்மை தேவையான 61 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், அங்கு எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளது. அவர்களுக்குப் பெரும்பான்மை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கையாள ஐசக் ஹெர்சாக் சரியான நபராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE