Tuesday 16th of April 2024 12:27:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
தளபதி பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 அப்டேட் வருமா?

தளபதி பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 அப்டேட் வருமா?


தமிழ் சினிமாவின் டொப் நடிகராக விளங்குபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.

மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தான் தளபதி 65.

இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.

இந்நிலையில் இந்த மாதம் 21ஆம் திகதி இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு பிறந்தநாள், அதே நேரத்தில் 22 ஆம் திகதி தளபதி விஜய்க்கு பிறந்தநாள்.

இதனால் தற்போது இவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE