Tuesday 23rd of April 2024 10:10:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
இங்கிலாந்து-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது!

இங்கிலாந்து-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது!


சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி-தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி லோட்சில் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் போட்டியின் இறுதி நாளாகிய நேற்று 273 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து 2வது இனிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்தியது நியூசிலாந்து.

2 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் நேற்யை நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது 2வது இனிங்ஸை இடைநிறுத்தியது.

இதையடுத்து 273 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி-தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் அறிமுக வீரராக களமிறங்கி முதலாவது இனிங்சிலேயே இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த டிவோன் கொன்வே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி

முதலாவது இனிங்சில் - 378/10

2வது இனிங்கில் - 168/6

இங்கிலாந்து அணி

முதலாவது இனிங்சில் - 275/10

2வது இனிங்சில் - 170/3

இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டம் வரும் 10 ஆம் திகதி பெர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE