Saturday 19th of June 2021 09:34:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிசாசு 2 படத்தில் பேய் ஓட்டும் நபராக விஜய் சேதுபதி!

பிசாசு 2 படத்தில் பேய் ஓட்டும் நபராக விஜய் சேதுபதி!


மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் தான் ‘பிசாசு.’ அதனைத் தொடர்ந்து‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.

இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பூர்ணா, ‘சைகோ’ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை இது மாறுபட்ட கதை அம்சத்தை கொ்டிருப்பதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்திருந்தார், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி ‘பிசாசு 2’ படத்தில் பேய் ஓட்டும் நபராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE