Saturday 19th of June 2021 09:20:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஏப்ரல் 21  தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது!

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது!


உயிா்த ஞாயிறு தாக்குதல் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிரதி தபாலதிபர் உள்ளிட்ட இருவர் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதி தபாலதிபரான 47 வயதான சந்தேக நபர் கஹடகஸ்திகிலிய பகுதியில் வைத்து பயங்கரவாத குற்றப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் இல் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் நான்கு பேருக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட மற்றொரு 35 வயதான சந்தேக நபர் காத்தான்குடியில் வசிப்பவர். இவா் சஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர் எனவும் அஜித் ரோஹன கூறினார்.

சந்தேக நபர் தீவிரவாதத்தை ஊக்குவித்ததாகவும், சஹ்ரான் ஹாசிமுக்கு அடைக்கலம் அளித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE