Thursday 25th of April 2024 07:11:43 AM GMT

LANGUAGE - TAMIL
-
கைவிடப்பட்ட 30 பேருந்துகள் இன்று  வடக்கு கடற்பரப்பில் இறக்கப்பட்டன!

கைவிடப்பட்ட 30 பேருந்துகள் இன்று வடக்கு கடற்பரப்பில் இறக்கப்பட்டன!


செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் இன்று 30 பேருந்துகள் இறக்கி விடப்பட்டன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, பயன்படுத்த முடியாது கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் இன்று ஆரம்பிக்கப்பட்ட, குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 30 பேருந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலாவது தொகுதி பேருந்துகளை காங்கேசன் துறை, துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் சென்ற சயுரு எனும் கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியில் குறித்த பேருந்துகளை கடலின் அடியில் இறக்கியுள்ளது.

இதேபோன்று எஞ்சிய பேருந்துகளும் எதிர்வரும் நாட்களில் கடலில் இறக்கி விடப்படும் என்று கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுளில் மேற்கொள்ளப்படுவது போன்று, செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதன் மூலம் எமது கடல் வளத்தினை கணிசமானளவு அதிகரித்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ள, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தலைமையிலான அணியினருக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் கடற்படையினயருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE