Saturday 19th of June 2021 09:28:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
செல்வந்த நாடுகளின் தலைவர்கள் கூடும் - ஜி-7 உச்சி மாநாடு ஆரம்பமானது!

செல்வந்த நாடுகளின் தலைவர்கள் கூடும் - ஜி-7 உச்சி மாநாடு ஆரம்பமானது!


பிரிட்டன் - கார்ன்வாலில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூடும் உச்சி மாநாடு ஆரம்பமாகி நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் ஆரம்பத்தின்போது உலகின் செல்வந்த நாடுகளின் தலைவர்கள் பாரம்பரிய குழு புகைப்படத்துக்கான இன்று ஒன்று கூடினர்.

மூன்று நாள் கூட்ட நிகழ்ச்சி நிரலில் காலநிலை மாற்றம், கொவிட் தடுப்பூசி விநியோகம் மற்றும் தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான உபாயங்கள் பிரதானமாக உள்ளன.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட பின்னர் நடத்தப்படும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் முதல் நேரடி நிகழ்வு இதுவாகும்.

இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டனுடன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

.இந்த மாநாட்டுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக போராட்டத்துக்கு உதவும் வகையில் 500 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையான வழங்கும் அமெரிக்காவின் முடிவை பைடன் அறிவித்தார்.

அத்துடன், சர்வதேச அளவில் ஏழை நாடுகளுக்கு 100 கோடி கோவிட் 19 தடுப்பூசிகளை வழங்கும் அறிவிப்பு ஜி-07 தலைவர்களின் உச்சி மாநாட்டில் வெளியாகலாம் என எதிர்பார்ப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் மட்டும் சுமார் 10 கோடி கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.

இதில் முதல் 50 இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும் மேலும் 2.5 கோடி தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகம் முழுவதிலும் அனைவருக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களுக்கு உறுதியளிக்குமாறு ஜோன்சன் ஏற்கனவே ஜி-07 தலைவர்களிடம் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE