Wednesday 24th of April 2024 02:52:36 AM GMT

LANGUAGE - TAMIL
.
பிரெஞ்சு ஓபன் ரெனிஸ் இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் - சிட்சிபாஸ் தகுதி!

பிரெஞ்சு ஓபன் ரெனிஸ் இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் - சிட்சிபாஸ் தகுதி!


பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டெனிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று நோவாக் ஜோகோவிச் மற்றும் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகிய இருவரும் தகுதி பெற்றுள்ளனர்.

முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிக்கு தகுதிபெற்ற ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ், 6-ம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார்.

முதல் இரு செட்களை சிட்சிபாஸ் 6-3, 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய ஸ்வெரேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி சிட்சிபாசுக்கு பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3 என கைப்பற்றி தனது திறமையை நிரூபித்தார். 3 மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ் 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

22 வயதாகும் ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ் முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களிமண்தரை ஆடுகளத்தின் ராஜாவான நாடலை வீழத்திய ஜோகோவிச்!

களிமண்தரை ஆடுகளத்தில் அசைக்கமுடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம் வரும் ரபேல் நாடலுக்கும் ஜோகோவிச்சுக்கும் இடையிலான பலப்பரீட்சையாக மற்றொரு அரையிறுதி ஆட்டம் அமைந்திருந்தது.

இதில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) – மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) மோதினர். முன்னணி வீரர்கள் மோதியதால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை வகித்தார். அதன்பிறகு சுதாரித்து ஆடிய ஜோகோவிச் இரண்டாவது சுற்றை 6-3 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன்மூலம் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது.

ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஜோகோவிச்சும் முதல் முறையாக தகுதி பெற்றுள்ள சிட்சிபாசும் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE