Thursday 25th of April 2024 12:17:19 PM GMT

LANGUAGE - TAMIL
-
தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு செல்கிறார் ரஜினி!

தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு செல்கிறார் ரஜினி!


சிகிச்சைக்காக தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு செல்ல மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறார் ரஜினி. இதையடுத்து அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறார்.

அமெரிக்காவில் சுப்பர்ஸ்டாருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கொரோனா பிரச்சனையால் ரஜினியால் அமெரிக்காவுக்கு செல்ல முடியாமல் இருந்தது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் நடித்த வந்த அண்ணாத்த பட வேலையை தொடர்ந்து ஊர் திரும்பிய ரஜினி விரைவில் அமெரிக்காவுக்கு செல்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறாராம்.

அதனால் தன் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் இன்னும் இருப்பதால் தனி விமானம் மூலம் செல்ல முடிவு செய்திருக்கிறாராம்.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE