Friday 19th of April 2024 05:14:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட எவருக்கும் உரிமையில்லை; விசேட உரையில் ஜனாதிபதி!

இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட எவருக்கும் உரிமையில்லை; விசேட உரையில் ஜனாதிபதி!


இலங்கையின் உள்ளக விவகாரங்களில் எந்த தரப்பினரும் தலையீடு செய்வதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பதாக குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தில் அச்சறுத்தலுக்கு உள்ளாகிய பௌத்த புராதனச் சின்னங்களை பாதுகாக்க தமது அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் பெருமிதம் வெளியிட்டார்.

நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்கள் சார்ந்த எந்தவொரு விடயத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.

இலங்கை மக்கள் அன்று மதரீதியிலான அடிப்படைவாத அச்சத்தில் உறைந்திருந்தனர். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைக்கு வீழ்ச்சி கண்டதை மக்கள் அவதானித்தார்கள். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானங்கள் காரணமாக எமது புலனாய்வுப்பிரிவு பலவீனமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவு சர்வதேசத்திற்கு முன்பாக அகௌரவப்பட்டது. எமது புராதன இடங்கள், தொல்பொருள் பகுதிகள் பகிகரங்கமாக அழிக்கப்பட்டன.

2009ஆம் ஆண்டு நாங்கள் முடிவுறுத்திய ஆயுதப் போராட்டம் மிகவும் பயங்கரமான தோற்றத்தில் மீண்டும்உருவாகியது. தேசிய பாதுகாப்பு குறித்து தற்போதுவரை பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றோம். பொறுப்புடைய பதவிகளுக்கு தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு துன்புறுத்தல்களினால் வீழ்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவின் மனநிலையை மீண்டும் நாங்கள் உறுதிப்படுத்தினோம். அன்று பலவீனமடைந்த புலனாய்வுப் பிரிவை மீண்டும் மறுசீரமைந்துள்ளோம். கடந்த ஆட்சிக்காலத்தில் மறக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். பாதாள உலகை கட்டுப்படுத்தியுள்ளோம்.

போதைப்பொருள் கடத்தல், பாவனையையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளோம். எமது கலாசாரம் உட்பட அனைத்தையும் அவமானப்படுத்தும் யுகத்தை நிறுத்தினோம். அனைவரினதும் அடையாளங்களைப் பாதுகாத்து, மற்றவர்களுக்கு இடையூறு அற்ற சமாதானமான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். கடந்த காலத்தில் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அம்பாறை பொத்துவில் கடலோர விகாரை, தீகவாவி போன்ற கலாசார மத உரிமைகளை நாங்கள் பாதுகாத்துள்ளோம். இன்று எமது நாட்டு மக்கள் இனியும் ஒற்றையாட்சி குறித்து அச்சமடையத் தேவையில்லை. எமது நாட்டு உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு எமது அரசாங்கம் எந்த வகையிலும் இடமளிக்காது. தேசிய பாதுகாப்பை எனது அரசாங்கம் உறுதிசெய்துள்ளது”

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய தருணத்தில் செலுத்த முடியாமற் போகும் என்று எதிர்கட்சியினர் வெளியிட்ட ஆருடங்களை தகர்த்தெறித்து ஸ்ரீலங்காவினால் கடன்களை சரியான நேரத்தில் செலுத்த முடிந்ததாகவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

பல்வேறு சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு இடங்கொடுக்கப்படவில்லை. தனிப்பட்ட ரீதியில் சில விம்பங்களை பெரிதுதடுத்திய போதிலும் அரசாங்கத்தின் உண்மையான பக்கங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவது தடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது பொய்யான விம்பமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

தனது ஆட்சியில் எந்த அரசியல் நியமனங்களும் மேற்கொள்ளவில்லை என்றும் நீதித்துறையிலும் அதேபோன்ற கொள்கையையே பின்பற்றியதாகவும் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய, கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு முன்நகர்ந்து பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இன்று பலவீனமடைந்திருப்பதாகவும், தோல்வியடைவதாகவும் இன்று விமர்சனம் வெளியிடுபவர்கள், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தனிப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததோடு, அவை இன்று நிறைவேற்றப்படாத காரணத்தினாலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE