Tuesday 23rd of April 2024 07:55:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா  ஜி ஜின்பிங் உரையுடன் கோலாகல ஆரம்பம்!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஜி ஜின்பிங் உரையுடன் கோலாகல ஆரம்பம்!


சீனகம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

சீன ஜனாதிபதியும்,சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜி ஜின்பிங் தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிகழ்வில் சுமார் 70,000 பேர் வரை பங்கேற்றுள்ளனர். நிகழ்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உரையாற்றினார்.

நூறாண்டுகளுக்குமுன்பு ஜூலை 1,1921 இல் ஷாங்காய் நகரில்,ஒருசிறிய வீட்டில் சீன கம்யூனிஸ்ட்கட்சி நிறுவப்பட்டது.இன்று அது மாபெரும் இயக்கமாக வளர்ந்து நுற்றாண்டை எட்டியுள்ளது.

இதேவேளை,சீனகம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு முழுநீள ஆவணப்படம் ஒன்றை சீனா உருவாக்கி உள்ளது.

கடந்த100ஆண்டுகளில் சீனாஅடைந்த வளர்ச்சியையும், அதன் வரலாற்றையும் விவரிக்கும் வகையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2500 நிமிடங்களைக் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை 100அத்தியாயங்களாக வெளியிட சீனா திட்டமிட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE