Tuesday 23rd of April 2024 09:04:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
சேருவில பிரதேச சபையை இழந்தது 'யானை'! - மலர்ந்தது 'தாமரை மொட்டு'!

சேருவில பிரதேச சபையை இழந்தது 'யானை'! - மலர்ந்தது 'தாமரை மொட்டு'!


திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றிக் கொண்டது.

கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்தச் சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புதிய தவிசாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான பிரேரணை இன்று முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் டப்ளியு.ஏ.ஜயசிரி, 3 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். இதனூடாக, இந்தச் சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது.

மொத்தம் 15 உறுப்பினர்களைத் கொண்ட இந்தச் சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 6 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 4 உறுப்பினர்களையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 3 உறுப்பினர்களையுமு், இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா ஓர் உறுப்பினரையும் கொண்டிருந்தன.

இன்றைய வாக்கெடுப்பின்போது, புதிய தவிசாளருக்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.

இன்றைய வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள, சபையில் பிரசன்னமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE