Friday 19th of April 2024 05:30:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
முன்னாள் போராளிகள் விவகாரம்; அரசாங்கம் தொடர்பில் சாணக்கியன் காட்டம்!

முன்னாள் போராளிகள் விவகாரம்; அரசாங்கம் தொடர்பில் சாணக்கியன் காட்டம்!


முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும் என்பதே நோக்கமாக கொண்டு அரசாங்கம் செயற்படுகின்றதா என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.

முன்னாள் போராளிகளாக இருந்து தமிழினத்தினை காட்டிக்கொடுத்தவர்கள் அரசாங்கத்தின் சுகபோகங்களை அனுபவித்துவரும் நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை மீண்டும் கைதுசெய்து சிறையிலடைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகளினாலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நோர்வேயில் இயங்கும் காலையடி உதவும் கரங்கள் அமைப்பினால் முன்னாள் போராளியொருவருக்கான தொழில் செய்யும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் நடைபெற்றது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் கோரிக்கைக்கு அமைவாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதுடன் இதனை வழங்கிவைக்கும் நிகழ்வு ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உபகரணத்தினை வழங்கிவைத்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள போராளிகள் பலர் வாழ்வாதாரம் இழந்த நிலையில் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன. இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்ய முன்வருவது வரவேற்கத்தக்க விடயம். இன்று ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களை இந்த அரசாங்கம் இலக்கு வைத்து விசாரணை நடாத்துவதும் கைதுசெய்வதுமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புனர்வாழ்வளிக்கப்படாதவர்களாக இன்று தமிழர்களை காட்டிக்கொடுத்தவர்களை அரசாங்கம் மடியில் வைத்துக்கொண்டு தமிழினத்தின் விடுதலைக்காக போராடி ஜனநாயக பாதைக்கு வந்து அரசியல் செய்யமுன் வந்திருக்கும் உறுப்பினர்களை கைதுசெய்வதை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த அரசாங்கத்தின் மிக கேவலமான செயற்பாடாகவே பார்க்கப்படவேண்டும்.

ஜனநாயக ரீதியாக அரசியல் செயற்பாட்டுக்கு வந்துள்ள முன்னாள் போராளிகளை கைதுசெய்வோம் விசாரணை செய்வோம் என்று அச்சுறுத்தப்பார்க்கின்றீர்களா?.தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு கடந்த தேர்தல் காலத்தில் ஆதரவளித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவரை கூட பல மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.

தயவுசெய்து முன்னாள் போராளிகளை கைதுசெய்வதை நிறுத்துங்கள். முன்னாள் போராளிகளை பழிவாங்குவதை நிறுத்துங்கள். நீங்கள் யாரையும் கைதுசெய்யவேண்டுமானால் எங்களது போராட்டத்தினை காட்டிக்கொடுத்தவர்களை முதலில் கைதுசெய்து விசாரணை செய்யுங்கள்.

இன்று அவர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புடன் இதுவரையில் புனர்வாழ்வளிக்கப்படாமல் சுற்றித்திரிகின்றனர். அரசாங்கத்தின் கைக்கூலிளாக முன்னாள் போராளிகள் இருக்கவேண்டும் என்பதையா இந்த அரசாங்கம் விரும்புகின்றது.

ஜனநாயக ரீதியாக அரசியல் செய்ய முன்வந்த முன்னாள் போராளிகளை தள்ளித்தள்ளி எங்கோ தள்ளிவிட இந்த அரசாங்கம் முயற்சிகின்றது.

இன்று கூடு வித்தவரை, சக பாராளுமன்ற உறுப்பினரை கொலைசெய்து சிறையிலிருந்தவரை ஐந்து வருடங்களின் பின்னர் மன்னிப்பு வழங்கியுள்ளீர்கள்.

தமிழ் மக்கள் இந்த பிரதேசத்தில் நிம்மதியாக வாழவேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இவ்வாறாக தமிழர்களை அடக்க நினைக்கும்போதேல்லாம் புதிய உணர்வுடன் எங்களது அரசியல் உரிமையினை தேடவேண்டிய நிலைக்கு தளப்பட்டுள்ளோம்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE