Friday 19th of April 2024 08:14:15 PM GMT

LANGUAGE - TAMIL
.
பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் நியமனம்!

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் நியமனம்!


பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அனூப பெல்பிட பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பில் பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அனூப பெல்பிட அவர்கள் கௌரவ பிரதமரிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றார்

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.அனூஷ பெல்பிட அவர்கள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து இன்று (14) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

இணைந்த சேவைகள் உதவி பணிப்பாளர், ஜனாதிபதி உதவி செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் கணக்காளர், அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முதலாவது பணிப்பாளர் நாயகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் தலைவர், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் என பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனூஷ பெல்பிட அவர்கள் 34 ஆண்டுகால சேவை அனுபவம் கொண்ட சிரேஷ்ட அதிகாரியாவார்.

கடந்த ஜுன் 22ஆம் திகதி அரச துறையிலிருந்து ஓய்வுபெற்ற அனூஷ பெல்பிட அவர்கள் அரசியலமைப்பின் பிரிவு 52 (1) இன் அதிகாரங்களின்படி அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE