Friday 23rd of July 2021 11:14:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆப்கான் - தலிபான்களிடையிலான  ஒப்பந்தத்தை வரவேற்கிறது ஐ.நா.!

ஆப்கான் - தலிபான்களிடையிலான ஒப்பந்தத்தை வரவேற்கிறது ஐ.நா.!


சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடர ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் தலிபான்களும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இதனை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் வரவேற்றுள்ளார்.

சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பில் கட்டார் தலைநகர் டோகாவில் இரு தரப்பினரும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர்.

இதன்போது மோதலுக்குக் காரணமாக சிக்கல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இரு தரப்பு உயர் மட்டத்தினரும் தொடர்ந்து சந்தித்துப் பேச இணக்கம் காணப்பட்டது.

இதனை ஏற்று இரு தரப்பினரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.

இந்நிலையிலேயே இந்த முயற்சி உற்சாகமளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அலுவலகம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதற்கான சமாதானப் பேச்சுவார்த்தைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பக்ரீத் பண்டிகை இம்முறை ஆப்கானிஸ்தானில் அமைதியாக கொண்டாடப்படும் என்று நம்புவதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE