Thursday 25th of April 2024 12:35:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
தல படத்தின் அடுத்த அப்டேட்!

தல படத்தின் அடுத்த அப்டேட்!


எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வருகின்ற வலிமை திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அது அஜித்தின் 60வது படமாகும். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கிறது.

கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக வலிமை பற்றி எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில் சமீபத்தில் தான் பெர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இவ்வாறிருக்க அஜித்தின் அடுத்த படமான தல 61 படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். இதன் மூலமாக அவர் மூன்றாவது முறையாக அஜித்துடன் தொடர்ச்சியாக கூட்டணி சேர்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றிய புது தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் தல 61 ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. அதனால் வலிமை ரிலீஸுக்கு முன்பே அடுத்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE