Thursday 25th of April 2024 07:41:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் சந்தியிலிருந்து முட்கொம்பன் வரை செல்லும் பிரதான வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் சந்தியிலிருந்து முட்கொம்பன் வரை செல்லும் பிரதான வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்!


கிளிநொச்சி ஸ்கந்தபுரம் சந்தியிலிருந்து முட்கொம்பன் வரை செல்லும் பிரதான வீதியின் 4. 19 கிலோமீட்டர் நீளமான வீதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் கண்ணகிபுரம் மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் செக்காலை அரசபுரம் சின்னப் பல்லவராயன்கட்டு ஆகிய கிராமங்களை இணைக்கின்ற இணைப்பு விதியாக காணப்படுகின்ற ஸ்கந்தபுரம் முட்கொம்பன் விதியின் ஒரு பகுதி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புனரமைக்கப்பட்ட போதும் குறித்த வீதி முழுமையாக சேதமடைந்து காணப்படுகிறது இதனால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

இதேவேளை ஏற்கனவே புனரமைக்கப்பட்ட பகுதியில் இருந்து 4.19 கிலோமீட்டர் நீளமான வீதி தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஐ றோட் திட்டத்தின் கீழ் குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் வீதி அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவே இவ்வாறு ஏற்கனவே 4.19 கிலோமீட்டர் வீதி புனரமைக்கப் பெற்றாலும் ஏற்கனவே புனரமைக்கப்பட்ட விதியானது மக்கள் பயணிக்க முடியாத நிலை மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டவிரோதமான மணல் அகழ்வு காரணமாக கனரக வாகனங்களின் அதிகரித்த பயணம் காரணமாகவே குறித்த வீதி முழுமையாக சேதமடைந்து காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கற்பவதி ஒருவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் இந்த வீதியின் ஊடாக ஸ்கந்தபுரம் அக்கராயன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முடியாது வீதி சீரின்மை காரணமாக முச்சக்கர வண்டி மூலம் முக்கொம்பன் பிரதேசத்தில் இருந்து நல்லுார் பரந்தன் ஊடாக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வீதியானது 9 கிராமங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே இவ்வீதியுடாக இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE