Thursday 18th of April 2024 08:45:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவை கட்டுப்படுத்த முடக்கப்பட்ட பிரதேசத்தை விடுவிக்குமாறு வெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவில் போராட்டம்!

கொரோனாவை கட்டுப்படுத்த முடக்கப்பட்ட பிரதேசத்தை விடுவிக்குமாறு வெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவில் போராட்டம்!


முல்லைத்தீவு நாயாறு பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்காக வாடியமைத்து தொழில்புரிந்துவரும் வெளிமாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் கொரோனா பேராபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அனுமதியும் இன்றி தெற்கின் புத்தளம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அத்து மீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தளத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து குறுகிய நிலப்பரப்பில் தொழில்செய்து வருகின்றார்கள்.

யூலை மாத தொடக்கத்தில் இருந்து இதுரை அப்பகுதியில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முடக்கப்பட்டுள்ள தங்கள் பிரதேசத்தை விடுவிக்க கோரி (24.07.2021 )இன்று போராட்டத்தில் குதித்துள்ள மக்களால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாக காணப்படும் நாயாற்று மீனவ குடும்பங்களினால் சுகாதார பிரிவினருக்கு சிரமங்களுக்கு முகம் கொடுத்து பணிசெய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த பதிவும் இல்லாத மக்களால் சுகாதார பிரிவினருக்கு பணிசெய்வதில் பாரியசவால்கள் இவர்கள் தொடர்பிலான கண்காணிப்போ அல்லது பதிவு நடவடிக்கையோ எவரிடமும் இல்லை இன்னிலையில் தான் (22.07.21)அன்று இந்த பகுதியில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் இரண்டு மாகாணங்களை கடந்து புத்தளத்திற்கு சென்றிருந்தமை குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வரும் மக்களால் கொரோனாக் கொத்தணி உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் காவலரண் அமைத்து வீதிசோதனை செய்து மக்களை விடாப்பிடியாக கட்டுபபடுத்திய பாதுகாப்பு தரப்பினர் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வசிக்கும் நாயாற்று பகுதிதொடர்பில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து பருவகால மீன்பிடிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதிக்கு அனுமதி கொடுத்தது யார் இந்த ஆண்டு எவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனகடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்னிலையில் ஆயிரம் வரையானவர்கள் சுமார் மூந்நூறு படகுகளுடன் இங்கு வந்து தொழில் செய்வதற்கு யார் அனுமதித்தார்கள் அவர்கள் தொடர்பிலான பதிவுகள் அரச திணைக்களம் எவற்றிலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர்இவ்வாறு இங்கு வாழ்கின்றார்கள் என்று யாரிடமும் தெரியாத நிலை அரசாங்கத்தின பண உதவியினை பெற்றுக்கொள்வதற்காக 198 பேர் பதிவு செய்துள்ளார்கள்.

நிவாரணம் கொடுக்கவுள்ளதாக பிரதேச செயலகத்தினால் பதிவினை முனனெடுத்தபோது 845 போர் பதிவினைமேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறு பதிவினை மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் அன்டியன்,பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதாரபிரிவினர் பரிந்துரை செய்த போது இல்லை 400 பேர்வரையில்தான் என்று புத்தளம் மீனவர்கள் சொல்கின்றார்கள்.

இவ்வாறு எந்த கணக்கும் பதிவும் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் புத்தள மீன்பிடியாளர்களால் அரச சுகாதார உத்தியோகத்தர்கள் தங்கள் கடமையினை முழுமையாக செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முடக்கப்பட்ட பகுதியான இந்த பகுதியில் இருந்து 379 பேர்வரைக்கும் பி.சி.ஆர் செய்யப்பட்டதில் 24.07.21 வரை 53 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.

இன்னிலையில் முடக்கப்பட்ட ஒரு பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் செய்வத்காக 24.07.21 அன்று சுகாதார பிரிவினர் சென்றபோது முடக்கப்பட்ட பகுதியில் இருந்த புத்தளவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நாட்டில் எத்தனையோ மக்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என வேண்டி நிக்கும் இந்த வேளையில் இந்த மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துளைக்காமையானது கவலையளிக்கின்றது.

கடற்தொழில் அமைச்சு,நீரியல்வளத்திணைக்களத்தின் எந்தஅனுமதியும் இல்லாத நிலையில் இவாகளின் கடற்தொழில் நடவடிக்கையினையும் இவர்களின் தொழில் நடவடிக்கையினையும் யார் கண்காணிப்பார்கள் இவ்வாறானவர்களின் செயற்பாட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாரிய ஆபத்து எதிர்காலத்தில் உள்ளது அரச பாதுகாப்பு இயந்திரங்கள் இதனை கருத்தில்கொண்டு சட்டம்அனைவருக்கும் சமம் என்பதை இங்கும் நிறைவேற்ற வேண்டும் என்பது முல்லைத்தீவு மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE