Friday 19th of April 2024 07:46:48 AM GMT

LANGUAGE - TAMIL
.
38வது கருப்பு ஜூலை, வெலிக்கடை படுகொலை நினைவு: திருகோணமலையில் அனுஷ்டிப்பு!

38வது கருப்பு ஜூலை, வெலிக்கடை படுகொலை நினைவு: திருகோணமலையில் அனுஷ்டிப்பு!


1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை தொடர்ந்து ஜூலை 25, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறச்சாலைக்குள் நடைபெற்ற படுகொலைகளில் ஆயுதப் போராட்ட ஆரம்ப கர்த்தாக்களான தங்கதுரை, தளபதி குட்டிமணி அடங்கலாக 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்ததன் 38வது நினைவு தினம் இன்று திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் 38வது கருப்பு ஜூலை, வெலிக்கடை படுகொலை நினைவும் இன்று ஞாயிறறுக்கிழமை பகல திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கத்தின் முன்னால் சுடரேற்றி அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் வினோனோதராதலிங்கம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் கிழக்குமாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசளருமான இந்திரகுமார பிரசன்னா, கட்சியின் இளைஞரணி உப தலைவர் இரத்தினஐயா வேணுராஜ் மற்றும் ஆதரவாளர்களும கலந்து கொண்டனர்.

பொலிசாரின் தடையை மீறி இந்நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE