Thursday 25th of April 2024 08:57:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒலிம்பிக்கில் முதல் தங்க  பதக்கத்தை வென்றது கனடா!

ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை வென்றது கனடா!


டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் கனடாவின் மேகி மேக் நெய்ல் (Maggie Mac Neil ) தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கனடா பெற்றுள்ள முதல் தங்கம் இதுவாகும். அத்துடன் மூன்றாவது பதக்கமாகவும் இது அமைந்துள்ளது.

பெண்களின் 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் பென்னி ஒலெக்ஸியாக் (Penny Oleksiak), கெய்லா சான்செஸ் (Kayla Sanchez,), மேகி மேக் நீல் (Maggie Mac Neil), மற்றும் ரெபேக்கா ஸ்மித் (Rebecca Smith) ஆகியோரின் ரிலே அணி சனிக்கிழமை முதல் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

அத்துடன், பெண்களுக்கான டைவிங் பிரிவில் கனடிய டைவர்ஸ் ஜெனிபர் ஆபெல் மற்றும் மெலிசா சிட்ரினி-பாலீயு இணையர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இந்நிலையில் பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் கனடாவின் மேகி மேக் நீல் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மேக் நீல் 55.59 வினாடிகளில் இலக்கை அடைந்தார். சீனாவின் ஜாங் யூஃபி 55.64 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவுஸ்திரேலியாவின் எம்மா மெக்கீன் 55.72 வினாடிகளில் நீந்தி மூன்றாம் இடத்தைப் பெற்றார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE