Monday 18th of October 2021 12:31:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழறிஞர் இளங்குமரனார் காலமானார்

தமிழறிஞர் இளங்குமரனார் காலமானார்


செந்தமிழ் அந்தணர் எனப் போற்றப்பட்ட தமிழறிஞர் இளங்குமரனார் மதுரையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.

மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், இலக்குவனார் ஆகியோரின் வழியில் தமிழியக்கத்தில் இவர் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார். மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டபடி செயல்படுத்தப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் சிறப்புத் தொகுப்பாளராக பாவாணரால் இணைத்துக்கொள்ளப்பட்டவர். தமிழ்ச் சொற்களுக்கு பொருள்காரணம் தரும் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனும் பத்து தொகுதிகளைக் கொண்ட இளங்குமரனாரின் நூல் குறிப்பிடத்தக்கது.

அழிந்துபோன நூல்களாகக் கருதப்பட்ட காக்கைப்பாடினியம், தமிழக ஒழுகு முதலிய பல நூல்களை இவர் பதிப்பித்துக் கொண்டுவந்தார்.

பூர்வீகத்தில் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்தவரான இளங்குமரனார், திருச்சி அருகில் நெடுஞ்சாலையில் ஓர் இடத்தை வாங்கி, தமிழூர் என்றும் அங்கு திருவள்ளுவர் தவச்சாலை என்பதை அமைத்து, ஒரு துறவியைப் போலவே வாழ்ந்துவந்தார். அங்கு தமிழ்சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதை தொடர்பணியாகவும் செய்துவந்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு டிலிட் எனும் முதுமுனைவர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இவர், திருக்குறள்வழி தமிழ்த் திருமண முறைப்படி ஏறத்தாழ 5 ஆயிரம் திருமணங்களையும் நடத்திவைத்துள்ளார். இவரின் தனித்தன்மையான திருமண முறை என்றாலும், இது சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஆதி தமிழ்த் திருமண முறைதான் என பதிலளிப்பது இளங்குமரனாரின் இயல்பு. தொண்ணூறு வயதைத் தாண்டியநிலையிலும் எழுத்துப் பணியை விடாமல் செய்துவந்தார். கடைசியாக, அறிவியல் தமிழ் தொடர்பாக 3 ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் எழுதிக்கொண்டிருந்த நிலையில், அவரின் உடல்நிலை நலிவடைந்தது. இதனால் அந்தப் பணி நிறைவடையவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE