Wednesday 29th of September 2021 02:24:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
வறுமையின் கோரப் பிடிக்குள் மக்களைத் தள்ளுகின்றது அரசு - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

வறுமையின் கோரப் பிடிக்குள் மக்களைத் தள்ளுகின்றது அரசு - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!


"வெற்றியளிக்காத இந்த அரசின் கொள்கைகளால் நாட்டு மக்கள் அனைவரும் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கப்போகின்றார்கள்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20 மாதங்களே ஆகின்றன. தற்போதைய அரசு பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகின்றது.

இந்த அரசின் வெற்றியளிக்காத அடிப்படைக் கொள்கைகள், சாத்தியமற்ற பொருளாதாரக் கொள்கைகள், வெற்றியளிக்காத செயற்பாடுகள் காரணமாக பிறக்க இருக்கும் குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தற்போதைய அரசானது கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க வேண்டிய போஷணைப் பொதியை வழங்குவதில்லை. இதன் காரணமாக பிறக்கவிருக்கும் குழந்தைகள் மந்தபோசணைக்கு உள்ளாகின்றனர்.

அதேபோன்று சிறுவர்களுக்கு வழங்க வேண்டிய திரிபோஷாக்களும் தற்போது வழங்கப்படுவதில்லை. இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர், திரிபோஷாவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சிறுவர்கள் மந்தபோசணைக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளது.

அதேபோன்று 43 இலட்சம் மாணவர்களின் கல்வி நிலை இரண்டு வருடங்களாகப் பாதிப்படைந்துள்ளது. அவர்களால் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இணையவழிக் கற்றலை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் அரசு இல்லாமல் செய்துள்ளது.

சம்பளப் பிரச்சினையத் தீர்க்குமாறு கோரி சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கும் போராடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த அரசு 2020 ஜனவரி மாதம் முதல் இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கு உறுதியளித்திருந்த போதிலும் இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக ஆசிரியர்கள் வீதியில் இறங்கியுள்ளனர். அதேபோன்று நமது நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகள் வயல்களிலிருந்து போராடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE