Thursday 25th of April 2024 05:28:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒலிம்பிக் துடுப்பு படகோட்டத்தில்   தங்கம் வென்றது கனடா பெண்கள் அணி!

ஒலிம்பிக் துடுப்பு படகோட்டத்தில் தங்கம் வென்றது கனடா பெண்கள் அணி!


டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் துடுப்பு படகோட்டப் போட்டியில் இன்று கனடா மற்றொரு தங்கப்பதக்கத்தை வென்றது.

08 பேர் கொண்ட துடுப்பு படகோட்டுதல் போட்டியிலேயே கனடா பெண்கள் அணி தங்கத்தை சுவீகரித்தது.

05 நிமிடங்கள் 59.13 வினாடிகளில் வெற்றி இலக்கை கனேடிய வீராங்கனைகள் அடைந்தனர்.

1992 பார்சிலோனா ஒலிப்பிக்கில் இவ்வாறான போட்டியில் கனடா தங்கம் வென்ற பின்னர், 2020 ஒலிம்பிக்கில் கனடா தங்கத்தைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெள்ளி (6: 00.04), சீனா வெண்கல (6: 01.21) பதக்கங்களைப் பெற்றன.

டோக்கியோ ஒலிம்பிக்கில் கனடா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE