Wednesday 29th of September 2021 01:47:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒலிம்பிக் கால்பந்து; பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில்  அமெரிக்காவை வீழ்த்தியது கனடா பெண்கள் அணி!

ஒலிம்பிக் கால்பந்து; பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது கனடா பெண்கள் அணி!


ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து அரையிறுதி பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி 1-0 எனும் கோல் கணக்கில் கனடா அணி வென்றது.

பரபரப்பான போட்டியின் 74 வது நிமிடத்தில் பனால்ட்டி உதை மூலம் கனேடிய வீராங்கனை ஃப்ளெமிங் கோல் அடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைவதை உறுதி செய்தார்.

இந்நிலையில் சர்வதேச தர வரிசையில் 8 ஆவது இடத்தில் உள்ள கனடா வெள்ளிக்கிழமை இறுதியாட்டத்தில் ஸ்வீடனுடன் மோதவுள்ளது.

எங்கள் வீராங்கனைகள் இறுதியாட்டத்தில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை பெறுவார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறேம் என கனடா பெண்கள் கால்ப்பந்து அணியின் பயிற்சியாளர் பெவ் பிரீஸ்ட்மேன் கூறினார்.

இதேவேளை, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வியாழக்கிழமை அமெரிக்க அணி அவுஸ்திரேலியாவுடன் விளையாடவுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கனடா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE