Tuesday 16th of April 2024 12:25:51 PM GMT

LANGUAGE - TAMIL
.
பீஸ்ட் படத்தில் வில்லன் பட்டாளத்துடன் மோதும் விஜய்!

பீஸ்ட் படத்தில் வில்லன் பட்டாளத்துடன் மோதும் விஜய்!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ‘பீஸ்ட்’ படத்தில் 3 வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்து வருவதாகவும், மற்றவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE