Tuesday 16th of April 2024 06:29:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நிறைவு: பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது அமெரிக்கா!

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நிறைவு: பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது அமெரிக்கா!


டோக்கியோ ஒலிம்பிக் தொடர் இன்று நிறைவுக்கு வந்துள்ள நிலையில் ஆரம்பத்தில் இருந்து பதக்கப்பட்டியலில் முன்னிலை வகித்து வந்த சீனாவை 2வது இடத்திற்கு பின்தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்தது அமெரிக்கா.

உலகாளாவிய கொரோனா அச்சுறுத்தல் நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆரம்பமாகி நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

இத்தொடர் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி, பதக்கப்பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வந்த சீனா, இறுதியாக ஒரு தங்கப் பதக்க வித்தியாசத்தில் (38 தங்கப் பதக்கங்களுடன்) இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.

இறுதியில் சீனாவுக்கு அதிர்ச்சியளித்த அமெரிக்கா (39 தங்கப் பதக்கங்களுடன்) முதலிடத்தை பெற்றுள்ளது.

போட்டித் தொடரை நடாத்திய ஜப்பான் (27 தங்கப் பதக்கங்களுடன்) மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உள்ளிட்ட 7 பதக்கங்கள் பெற்ற இந்தியா 48 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இம்முறை இலங்கைக்கு எவ்வித பதக்க வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் (113 பதக்கங்கள்)

சீனா - 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் (88 பதக்கங்கள்)

ஜப்பான் - 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் (58 பதக்கங்கள்)


Category: விளையாட்டு, புதிது
Tags: சீனா, இந்தியா, அமெரிக்கா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE