Thursday 28th of March 2024 08:10:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
மீண்டும் கொவிட் 19 ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் கனடா - ஒன்ராறியோ மாகாணம்!

மீண்டும் கொவிட் 19 ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் கனடா - ஒன்ராறியோ மாகாணம்!


கனடா - ஒன்ராறியோ மாகாணத்தில் கொவிட் 19 தொற்று நோயாளர் தொகை மீண்டும் அதிகரித்து வருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை மாகாணத்தில் 781 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அத்துடன் 3 கொவிட் மரணங்களும் பதிவாகின.

கடந்த ஜூன் மாத ஆரம்பத்தின் பின்னர் மாகாணத்தில் நாளொன்றில் பதிவான மிக அதிகளவு தொற்று நோயாளர் தொகையாக இது அமைந்துள்ளது.

ஜூன் ஆரம்பத்தில் முடக்க நிலையை மாகாணம் தளர்த்தியதைத் தொடர்ந்து தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது.

மாகாணத்தில் கடந்த 7 நாட்களில் பதிவான தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை 664 ஆக உள்ளது. அதற்கு முன்னைய வாரத்தில் இந்த சராசரி 518 ஆக இருந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 781 பேரில் 634 பேர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது ஒரு தடுப்பூசியை மட்டும் பெற்றுக்கொண்டவர்கள். 147 பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.

மாகாணத்தில் கிரேட்டர் ரொரண்டோ பகுதியிலேயே வெள்ளிக்கிழமை அதிகளவாக 185 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். ஜூன் 4-ஆம் திகதிக்குப் பின்னர் நகரத்தில் பதிவான அதிகளவு தொற்று நோயாளர் தொகை இதுவாகும்.

இதனைவிட டர்ஹாம் பிராந்தியத்தில் - 40, யோர்க் - 93, ஹால்டன் 15, ஹாமில்டனில் 66 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை மாகாணத்தில் உயிரிழந்த மூவரில் ஒருவர் நீண்டகால முதியோர் பராமரிப்பு மையத்தில் வசிப்பவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மரணங்களுடன் மாகாணத்தில் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,489 ஆக அதிகரித்துள்ளது.

மாகாணத்தில் தொற்றுக்குள்ளான 547,823 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5,444 பேர் தொற்று நோயுடன் சிகிச்சையில் உள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 306 பேரில் 158 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

16 நாட்களுக்கு முன்பு, மாகாணம் முழுவதும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்திய 100 பேர் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர்.

ஒன்ராறியோவில் இதுவரை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 83 வீதமானவர்கள் குறைந்தது ஒரு கொவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 76 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE