Tuesday 16th of April 2024 07:45:32 AM GMT

LANGUAGE - TAMIL
.
பிரதமர் ட்ரூடோ தலையிலான லிபரல் பிரச்சாரக் கூட்டத்தை குழப்பிய  கன்சர்வேடிவ்களுக்கு எதிர்ப்பு!

பிரதமர் ட்ரூடோ தலையிலான லிபரல் பிரச்சாரக் கூட்டத்தை குழப்பிய கன்சர்வேடிவ்களுக்கு எதிர்ப்பு!


ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள போல்டன் பகுதியில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச இருந்த தேர்தல் பொதுக்கூட்டதில் கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களது ஆரவாளர்களுடன் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது கடும் எதிர்ப்பலைகளைத் தூண்டியுள்ளது.

போல்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரச்சாரத்துக்கு வந்த பிரதமரும் லிபரல் கட்சித் தலைவருமான ஜஸ்ரின் ட்ரூடோ சூழ்ந்துகொண்ட ஆா்ப்பாட்டக்காரர்கள் சிலர், அவரைப் பேசவிடாது கூச்சலிட்டனர். அத்துடன், அக்கூட்டத்தில் இருந்த சிலர் ஆபச வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்துகொண்டனர்.

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதேவேளை, உள்ளூர் கன்சர்வேடிவ் எம்.பி. கைல் சீபேக்கின் குறைந்தது நான்கு ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தைக் குழப்பியவர்களில் அடங்கிருந்தமை அங்கு பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர்கள் கைல் சீபேக்கின் பிரச்சாரக் குழு ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் எதிர்ப்புக் கோஷமிட்டதுடன், அபாசமான, அநாகரிக வாா்த்தைகளை பிரயோகித்து சத்தமிட்டனர்.

இந்நிலையில் இந்தச் செயற்பாடு அநாகரிகமானது என கனடா முழுவதும் கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கன்சர்வேடிப் கட்சித் தலைவர் உட்பட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இந்தச் செயலை அசிங்கமானது எனக் கூறி கண்டித்துள்ளனர்.

எதிர்ப்புக்கள் வலுவடைந்ததை அடுத்து இதற்காக மன்னிப்புக் கோரிய கன்சர்வேடிவ் எம்.பி. கைல் சீபே, மோசமாக நடந்துகொண்ட நபர்கள் தனது பிரச்சாரக் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள் எனக் கூறினார்.

அத்துடன், கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ டூல் இந்த செயற்பாட்டைக் கண்டித்துள்ளார்.

மற்ற கட்சித் தலைவர்களை துன்புறுத்துதல் மற்றும் மிரட்டலில் ஈடுபடுதல் போன்ற அநாகரிக நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவா் தெரிவித்துள்ளார். இவ்வாறனவர்களை கட்சி வரவேற்காது எனவும் அவா் நேற்று சனிக்கிழமை தனது ஆதரவாளர்களை எச்சிரித்தார்.

கனடா ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் ஆரோக்கியமான மற்றும் மரியாதைக்குரிய வகையில் கருத்துக்களை விவாதிக்க வேண்டும் என அவா் தெரிவித்தார்.

அத்துடன், என்.டி.பி. தலைவர் ஜக்மீத் சிங்கும் பிரச்சாரத்தைக் குழப்பும் வகையில் நடந்துகொண்ட போராட்டக்காரர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ஒருவருடைய பிரச்சாரத்தை இரத்துச் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை என அவா் குறிப்பிட்டார்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE