Friday 29th of March 2024 06:39:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் அமைக்க நல் உள்ளங்களிடம் இருந்து நிதி உதவி கோரப்படுகின்றது!

மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் அமைக்க நல் உள்ளங்களிடம் இருந்து நிதி உதவி கோரப்படுகின்றது!


மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 மரணங்கள் தற்போது அதிகரித்துச் செல்லும் நிலையில் சடலங்கள் வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உடனடியாக மின் தகன நிலையத்தை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள மையினால் மாவட்டத்தில் உள்ள அனைவரது ஒத்துழைப்பும் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் வாரம் மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்ற விசேட கலந்து ரையாடலில் குறித்த தீர்மானம் முன் வைக்கப்பட்டது.

இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக மின் தகன நிலையத்தை மன்னார் நகரசபை பிரிவில் உள்ள மன்னார் பொது மயான பகுதியில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மின் தகன நிலையத்தை அமைப்பதற்கும், வாகனத்திற்கு பணம் கொடுத்து சடலங்களை அனைவராலும் ஏற்றி வர முடியாது என்பதினால் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யவும் சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகிறது.

நிதி போதாமை காரணமாக அரச சார்பற்ற அமைப்புக்கள் ,வெளிநாட்டில் உள்ள நண்பர்கள், தனவந்தர்கள் முன் வந்து உதவி செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நிதி உதவியை செய்ய விரும்பும் நல் உள்ளங்கள் கீழ் குறிப்பிடும் வங்கி கணக்கிற்கு நிதியை வைப்புச் செய்ய முடியும்.

வங்கி விபரம்.......

வங்கி - இலங்கை வங்கி (BOC)

கணக்கு இலக்கம் - 939526

பயனாளி- Officers Welfare Society Kachcheri

விபரம்- தகனம் (Crematorium)


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE