Wednesday 29th of September 2021 12:49:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
எதிர்ப்புக் குழுவிடமிருந்து பஞ்ஷீரை  கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவிப்பு!

எதிர்ப்புக் குழுவிடமிருந்து பஞ்ஷீரை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவிப்பு!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வட-கிழக்கே பஞ்ஷீர் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த பஞ்ஷீர் பள்ளத்தாக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை பஞ்ஷீரை முழுமையாகக் கைப்பற்றி தங்களது கொடியை தலிபான்கள் ஏற்றினர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஞ்ஷீர் பகுதியில் தங்களது கொடியை ஏற்றும் காணொளி ஒன்றையும் தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி எனும் கிளர்ச்சிக் குழு, தாலிபன் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு மட்டும் தாலிபன்களின் வசம் வராமல் இருந்தது.

இந்நிலையிலேயே தற்போது அந்த இடத்தையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.

எனினும் தாங்கள் முக்கியமான நிலைகள் அனைத்திலும் இன்னும் இருப்பதாகவும் தொடர்ந்து சண்டையிடுவோம் என்றும் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் தாலிபன்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் அகமது மசூத் வலியுறுத்தியுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE